உலகம்

ஐக்கிய அரபு நாடுகளின் பனிப்பொழிவு எச்சரிக்கை

11/11/2024 08:32 PM

அபுதாபி, 11 நவம்பர் (பெர்னாமா) -- ஐக்கிய அரபு நாடுகளின் பனிப்பொழிவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து அங்கு தேசிய வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய அரபு சிற்றரசு ஒரு கலவையான உலக அமைப்பைக் கொண்ட நாடு ஆகும். 

ஒருபுறம் பாலைவனமும், மறுபுறம் மலைப்பிரதேசங்களும், கடலும் சூழ்ந்த நாடு தான் ஐக்கிய அரபு அமீரகம் ஆகும். அதனால் அங்கு அதிக குளிர், அதிக வெப்பம், மழை என வானிலையும் மாறுபட்டதாக இருக்கும்.

குறிப்பாக துபாய் நகரத்தின் பருவநிலை அவ்வப்போது மாறுபட்டு வருகிறது. அங்குள்ள பாலை வனத்தில் கடந்த வாரம் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் மணல் மேடுகளாக காணப்பட வேண்டிய பாலைவனம், பனிகுவியலாக காட்சி அளித்தது. 

இந்த நிலையில் துபாய் வானிலை குறித்து தேசிய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி துபாயின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு சிற்றரசில் கடந்த சில மாதங்கள் முன்பு வரலாறு காணாத மழை பெய்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

குறிப்பாக, அங்குள்ள துபாய், பஹ்ரைன் உள்ளிட்ட நகரங்கள் மழையின் மூழ்கியே போயின. சுமார் 2 ஆண்டுகளுக்கு பெய்ய வேண்டிய மழை இரண்டே நாட்களில் அங்கு கொட்டி தீர்த்தது குறிப்பிடத்தக்கது.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)