லிமா, 18 நவம்பர் (பெர்னாமா) -- பருவநிலை மாற்றம் மற்றும் அமைதி போன்று உலகளாவிய பிரச்சினைகளை சமாளிக்க G20 உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை ஐ.நா அறிவுறுத்தியிறுக்கிறது.
உலக வரலாற்றில் இவ்வாண்டே மிக அதிகமான வெப்பம் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் காசா, உக்ரேன் மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் நிகழந்து வரும் போர் சூழலையும் ஐ.நா. பொது செயலாளர் அந்தோணியோ குட்டெரெஸ் சுட்டிக்காட்டினார்.
'' நான் ஒரு எளிய செய்தியுடன் ரியோவிற்கு வந்துள்ளேன்: ஜி20 தலைவர்கள் வழிநடத்த வேண்டும். வரையறையின்படி, ஜி20 நாடுகள் மிகப்பெரிய பொருளாதார செல்வாக்கைக் கொண்டுள்ளன. மேலும் அவை பெரிய அரசதந்திர செல்வாக்கைக் கொண்டுள்ளன. முக்கிய உலகளாவிய பிரச்சினைகளைச் சமாளிக்க அவர்கள் (ஜி20) அதைப் பயன்படுத்த வேண்டும், '' என்றார் அவர்.
APEC மாநாட்டை ஒட்டி, பெரு, லிமாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் குட்டெரெஸ் அவ்வாறு கூறினார்.
உலகின் பொருளாதாரத்தில் G20 நாடுகள் 85 விழுக்காடு பங்கு வகிப்பதாகவும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதியை வழங்கவும் அந்நாடுகள் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)