கோலாலம்பூர், 20 நவம்பர் (பெர்னாமா) -- 2027ஆம் ஆண்டுக்கான பள்ளி பாடத்திட்டத்தில் ஆரம்ப பள்ளிகளின் முதலாம் நிலையில் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் ஆளுமையில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தும்.
பாலர்பள்ளி முறையில் மறுசீரமைப்பு மற்றும் பாடத்திட்டங்களில் தலையீடுகள் உட்பட நாட்டின் கல்வி முறையை சீரமைக்க பல்வேறு முயற்சிகளை கல்வி அமைச்சு தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக அதன் துணை அமைச்சர் வோங் கா வூ தெரிவித்தார்.
'' 2027ஆம் ஆண்டு பள்ளி பாடத்திட்டத்தை முடிவு செய்யும் போது அல்லது இறுதி செய்யும் போது மாற்றத்தை ஏற்படுத்துகிறோம். நடப்பிலுள்ள தேசியக் கல்விக் கொள்கை மற்றும் தேசிய மெய்யியல் அடிப்படையில் மட்டுமின்றி, 2027ஆம் ஆண்டு பள்ளி பாடத்திட்டத்தின் கீழ் வளமான மக்கள், கடப்பாடுள்ள குடும்பங்கள் மற்றும் நாட்டிற்கு மீண்டும் பங்களிக்கும் தேசிய குடும்பங்களை உருவாக்குவதை கல்வி அமைச்சு நோக்கமாகக் கொண்டுள்ளது, '' என்றார் அவர்.
2027ஆம் ஆண்டுக்குள் பயன்படுத்தப்படும் புதிய பாடத்திட்டம் குறித்து ஶ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் அமினோல்ஹுதா ஹாசன் எழுப்பிய கேள்விக்கு வோங் கா வூ அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)