மலாகா , 21 நவம்பர் (பெர்னாமா) -- பிஜேகே எனும் பில்லி ஜீன் கிங் டென்னிஸ் போட்டியின் வெற்றிக் கிண்ணத்தை இத்தாலி ஐந்தாவது முறையாக கைப்பற்றியது.
அதன் இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் ஜாஸ்மின் பாவோலினி 2-0 எனும் நிலையில் ஸ்லோவாக்கியாவின் ரெபெக்கா ஸ்ரம்கோவாவைத் தோற்கடித்து தமது நாட்டின் வெற்றியை உறுதி செய்தார்.
முன்னதாக, நடைபெற்ற மற்றொரு தனி நபர் பிரிவில், இத்தாலியின் லூசியா ப்ரோன்செட்டி 6-2, 6-4 என்று ஸ்லோவாக்கியாவின் விக்டோரியா ஹ்ருன்சகோவாவை நேரடி செட்களில் வீழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து, உலகத் தரவரிசையில் நான்காம் இடத்தில் உள்ள ஜாஸ்மின் பாவோலினியும் 6-2, 6-1 என்று மிக எளிதியில் ரெபெக்கா ஸ்ரம்கோவா நேரடி செட்களில் தோற்கடித்தார்.
கடந்த ஆண்டு கனடாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், இரண்டாம் இடத்தைப் பிடித்த இத்தாலி, 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக உலக வெற்றியாளராக முன்னேறும் இலக்கில் தடம் பதித்துள்ளது.
ரோலண்ட் கரோஸ் மற்றும் விம்பிள்டன் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்த மகிழ்வோடு ஜாஸ்மின் பாவோலினி இவ்வாண்டை நிறைவு செய்கின்றார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)