பொது

சாலை போக்குவரத்து அபராதங்களுக்கு 60 விழுக்காடு வரை கழிவு

20/11/2024 07:29 PM

கோலாலம்பூர், 20 நவம்பர் (பெர்னாமா) --  பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, சாலை போக்குவரத்து அபராதங்களுக்கு 60 விழுக்காடு வரை கழிவு வழங்கப்படவுள்ளதாக, உள்துறை அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இம்மாதம் 22-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை மட்டுமே அக்கழிவுக்கான வாய்ப்பு அமலில் இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மடானி அரசாங்கத்தின் இரண்டாண்டு நிறைவு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த சிறப்பு கழிவு வழங்கும் திட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காலை சுமார் 9 மணி தொடங்கி  மாலை மணி 6 வரை பொதுமக்கள் தங்கள் சாலை போக்குவரத்து அபராதத்தைச் செலுத்தலாம். 

இதனிடையே, தள்ளுபடிக்கான அளவுகோல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)