பாகு, 24 நவம்பர் (பெர்னாமா) -- பருவநிலை மாற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு ஆண்டுதோறும் குறைந்தது 30 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் நிதியை வழங்குவதற்கு, உலகளவில், சுமார் 200 நாடுகள் சிஓபி 29 பருவநிலை மாநாட்டில் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
வளர்ந்து வரும் நாடுகள், பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய தாக்கத்தைக் கையாள உதவுவதற்கு அந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் இதர பணக்கார நாடுகள் அதற்கு இணக்கம் தெரிவ்த்துள்ளதாக கூறப்படுகிறது.
சீனா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள் அதில் பங்குபெறாமல் இருக்கலாம் எனும் நிபந்தனையும் அதில் சேர்க்கபட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் மனிதநேயத்துக்குச் செய்துகொள்ளப்பட்ட காப்புறுதித் திட்டம் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பருவநிலை பிரிவுத் தலைவர் சைமன் ஸ்டீல் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் சரியான இலக்கை நோக்கில் செல்லும் பட்சத்தில், எதிர்காலத்தில் கூடுதல் நிதியுதவிக்கும், அது வழிவகுக்கும் என்று உலக நாடுகளின் பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இருப்பினும், நிதியுதவி என்பது மானியமாகவோ அல்லது கடனாகவோ வருமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது.
காரணம், கடன் அடிப்படையிலான நிதியானது தங்களின் தற்போதைய கடன் சுமைகளை அதிகப்படுத்தக்கூடும் என்று சில ஏழ்மை நிலை நாடுகள் அஞ்சுகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)