பொது

ஈராண்டுகளில் மடானி அரசாங்கத்தின் பல்வேறு மாற்றங்களும் சீர்திருத்தங்களும்

25/11/2024 03:53 PM

கோலாலம்பூர், 25 நவம்பர் (பெர்னாமா) --   மக்கள் நலனைக் காக்கவும் நாட்டை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லவும் பல்வேறு மாற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்களை மடானி அரசாங்கம் ஆட்சி அமைத்த ஈராண்டுகளில் மேற்கொண்டுள்ளது.

மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை முன்னெடுக்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

கடந்த ஈராண்டுகளில் மடானி அரசாங்கம் கண்டுள்ள வளர்ச்சி குறித்து தாம் மனநிறைவு கொள்வதாக பிரதமர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மற்றும் நாட்டின் கண்ணியத்தை உயர்த்தும் வகையில் மடானி அரசாங்கம் தனது ஈராண்டு நிர்வாகத்தில் செயல்படுத்திய பல திட்டங்களின் விளக்கப்படத்தையும் டத்தோ ஶ்ரீ அன்வார் தமது முகநூலில் பதிவேற்றியுள்ளார்.

பி40 பிரிவைச் சேர்ந்த 90 லட்சம் பேருக்கு ரஹ்மா உதவி தொகையும், 600 மளிகை கடைகள் மற்றும் பேரங்காடிகளில் அடிப்படை பொருள்களை வாங்கும் வகையில் 84 லட்சம் பேருக்கு ரஹ்மா அடிப்படை உதவியும் மடானி அரசாங்கம் மேற்கொண்ட திட்டங்களில் அடங்கும்.

வறிய நிலை மற்றும் பி40 குழுவின் வருமானத்தை அதிகரித்த, 4,615 பங்கேற்பாளர்களை உட்படுத்திய மக்கள் வருமானத் திட்டத்தையும் பிரதமர் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)