கோலாலம்பூர், 25 நவம்பர் (பெர்னாமா) -- 2026 மலேசியாவுக்கு வருகை புரியும் ஆண்டு பிரச்சாரங்களின் ஏற்பாடுகளுக்காக மொத்தம் 40 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சிடம் இருந்து, 2025-ஆம் ஆண்டுக்காக 140 கோடி ரிங்கிட் பெறப்பட்டுள்ள நிலையில், அந்த தொகையில், 110 கோடி ரிங்கிட் நிர்வாகத்திற்கும், 22 கோடியே 90 லட்சம் ரிங்கிட் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் என்று சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துணை அமைச்சர் கைருல் ஃபிர்டாவுஸ் அக்பர் கான் தெரிவித்தார்.
இந்த ஒதுக்கீட்டின் மூலம் நாட்டின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் தமது அமைச்சு கவனம் செலுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவத்ன் வழி, நாட்டின் பொருளாதாரமும் உயரும் என்று தாம் நம்புவதாக கைருல் கூறினார்.
மேலும், நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய திட்டங்களை அமல்படுத்த அமைச்சு முக்கியத்துவம் செலுத்தும் என்று அவர் விளக்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)