பெட்டாலிங் ஜெயா, 27 நவம்பர் (பெர்னாமா) -- நாட்டில் இரண்டாவது குரங்கம்மை நோய் தொற்று சம்பவம் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் இதுவரை இரண்டு குரங்கம்மை நோய் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இத்தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள 34 வயதுடைய மலேசிய ஆடவர், கடந்த 21 நாட்களில் வெளிநாட்டிற்குப் பயணம் மேற்கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, தற்போது அவ்வாடவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தது.
எனினும், அவரின் உடல் நிலை சீராக இருப்பதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)