பொது

நாட்டில் ஒரு புதிய குரங்கம்மை சம்பவம் பதிவு

27/11/2024 08:02 PM

புத்ராஜெயா, 27 நவம்பர் (பெர்னாமா) -- கடந்த நவம்பர் 25ஆம் தேதி கிளேட் II உருமாறியத் தொற்றை உட்படுத்தி நாட்டில் ஒரு புதிய குரங்கம்மை சம்பவத்தை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.

34 வயதுடைய உள்நாட்டு ஆடவர் இந்நோய்க்கு ஆளாகி இருப்பதாக அவ்வமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அந்த உள்நாட்டு ஆடவர் 21 நாட்கள் காலக்கட்டத்தில் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருப்பதோடு, ஆபத்தான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

கடந்த 15ஆம் தேதி தொடங்கியே அவருக்கு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதோடு கடந்த 23ஆம் தேதி அதற்கு சிகிச்சையும் பெற்றுள்ளார்.

தற்போது அவர் சீரான நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, நெருங்கிய தொடர்புள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர்.

இதன்வழி, 2023ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி தொடங்கி, இதுவரை நாட்டில் பதிவாகிய மொத்த குரங்கம்மை சம்பவங்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)