உலகம்

சில நிபந்தனைகளோடு போர் நிறுத்தம்

27/11/2024 07:47 PM

லெபனான், 27 நவம்பர் (பெர்னாமா) --  ஹிஸ்புல்லா - இஸ்ரேல் இடையே நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். 

போர் நிறுத்தத்தை அறிவித்த கையோடு பெஞ்சமின் நெதன்யாகு, ஹிஸ்புல்லா, ஆயுதங்களை கையில் எடுத்தால் நாங்களும் பதிலுக்கு தாக்குவோம் என தெரிவித்துள்ளார். 

ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு எதிராக பயங்கரவாத கட்டமைப்பை எழுப்பும் என்றால் பதிலடி கொடுக்கப்படும் என்றும்அ அவர் கூறியுள்ளார்.

ராக்கெட்டுகளை ஏவினாலும் சுரங்கம் தோண்டினாலும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தும் என்றும் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

ராக்கெட்டுகளை சுமந்து லாரிகள் வந்தாலும் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடியாக தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் அமெரிக்காவின் புரிதலோடு கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)