செராஸ், 28 நவம்பர் (பெர்னாமா) -- 2024/2025 ஆம் ஆண்டு மலேசிய கிண்ண காற்பந்து போட்டி.
நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் PT ATHLETIC குழுவை 3-0 கோல்களில் தோற்கடித்து சபா காலிறுதிக்கு முன்னேறியது.
தலைமை பயிற்றுநர் டத்தோ ஓங் கிம் சுவி பதவி விலகியதால், செராஸ், கோலாலம்பூர் காற்பந்து அரங்கில் நடைபெற்ற இவ்வாட்டத்தில் சபா பயிற்றுநரின் உதவியின்றி களமிறங்கியது.
முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிவடைய, இரண்டாம் பாதி ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் டேரன் லோக் சபாவின் முதல் கோலை அடித்தார்.
ஆறு நிமிடங்கள் கழித்து, சபா மேலும் ஒரு கோலை அடித்து ஆட்டத்தில் முன்னணி வகித்தது.
ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் பிரேசில் இறக்குமதி ஆட்டக்காரர் ஜோ பெட்ரோ சபாவிற்கு மூன்றாவது கோலை அடித்து, தமது அணிக்கு காலிறுதிக்குச் செல்லும் நுழைவுச் சீட்டை பெற்றுத் தந்தார்.
மொத்த கோல் எண்ணிக்கையில் 7-0 என்ற நிலையில் வெற்றி பெற்ற சபா, காலிறுதி ஆட்டத்தில் பினாங்கு அல்லது கூச்சிங் சிட்டி எஃப்.சி.யுடன் மோதவுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)