உலகம்

திருவண்ணாமலையில் மண் சரிவு; எழுவர் புதையுண்டனர்

02/12/2024 06:46 PM

திருவண்ணாமலை, 02 டிசம்பர் (பெர்னாமா) --  ஃபெங்கல் புயலின் தாக்கத்தால் திருவண்ணாமலையில் தொடர்ந்துன்பெய்த கனமழையின் காரணமாக, வா.உ.சி நகர் பகுதியில் உள்ள அண்ணாமலையார் மலையில், நேற்றிரவு மண் சரிவு ஏற்பட்டது.

இந்த இயற்கைப் பேரிடரினால், சிறுவர்கள் உட்பட எழுவர் மண்ணுக்குள்ள புதைந்துள்ள நிலையில், அவர்களை தேடி மீட்கும் பணிகள் தொடரப்பட்டு வருகின்றன.

மலையிலிருந்து உருண்டு வந்த சுமார் 40 டன் எடை கொண்ட பாறை, குடியிருப்பு பகுதியில் விழுந்ததில், மூன்று வீடுகள் புதையுண்டன.

மண்ணில் புதைந்துள்ள அவ்வீட்டுக்குள் ராஜ்குமார், அவரது மனைவி மீனா, அவர்களது பிள்ளைகள் இருவர் மற்றும் அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் 3 பேர் என மொத்தம் 7 பேர் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

மலைப் பாதை என்பதாலும், இடிபாடுகளுடனும் உள்ளதால் மீட்புப் பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

அச்சம்பவத்தைத் தொடர்ந்து, அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)