கோலாலம்பூர், 03 நவம்பர் (பெர்னாமா) -- மலேசிய பூப்பந்து சங்கத்தின் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம் விசாரணை நடத்தியதாக வெளியான செய்தியால் தேசிய பூப்பந்து அரங்கம் அதிர்ச்சியடைந்தது.
தொழில் ரீதியாக தங்கள் கடமைகளைச் செய்த எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகளுக்கு தாங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கியதாக அச்சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவித்துள்ளது.
அச்சங்கத்தின் உயர் அதிகாரி தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் நோக்கில் எஸ்.பி.ஆர்.எம் வருகை புரிந்ததாக அறியப்படாத நபரிடமிருந்து முன்னதாக தகவல் கிடைத்திருக்கின்றது.
சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி, வாரிய அனுமதியின்றி கூடுதல் அலவன்ஸ் பெற்றதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
இது ஊழல் தடுப்புச் சட்டங்களை மீறுவதாகும்.
இந்த விவகாரம் தொடர்பில், அச்சங்கத்தின் இடைக்காலத் தலைவர் டத்தோ வி. சுப்ரமணியம் மற்றும் பொதுச் செயலாளர் டத்தோ கென்னி கோ ஆகிய இருவரின் அறிக்கைகள் பெற அழைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)