தாய்லாந்து, 03 டிசம்பர் (பெர்னாமா) -- தெற்கு தாய்லாந்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் நவம்பர் 22-ஆம் தேதி முதல் தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் கடுமையான மழை, வெள்ளம் ஏற்பட்டதாக பேரிடர் தடுப்பு மற்றும் தணிப்புத் துறை கூறியது.
வெள்ளத்தால் சுமார் 664,173 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்றைய நிலவரப்படி சுமார் 22,000 பேர் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
தெற்கு தாய்லாந்தில் பெய்து வரும் தொடர் மழையால், இன்னும் ஏழு இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம் என்று பேரிடர் தடுப்பு மற்றும் தணிப்புத் துறை, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)