BREAKING NEWS   PM Anwar expresses condolences to the family of Egyptian Islamic movement activist Youssef Nada who passed away today | 
 பொது

புதன்கிழமை வரை மோசமான & எச்சரிக்கை நிலையிலான கனமழை பெய்யும்

09/12/2024 04:22 PM

கோலாலம்பூர், 09 டிசம்பர் (பெர்னாமா) -- கிழக்குக் கடற்கரை உட்பட ஏழு மாநிலங்களில் புதன்கிழமை வரையில், மோசமான மற்றும் எச்சரிக்கை நிலையிலான கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக மலேசியா வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

பகாங்கில் குவாந்தான், பெக்கான், ஜெரண்டுட், மாறன், ரோம்பின் ஆகிய ஐந்து மாவட்டங்கள் உட்பட திரெங்கானுவில் கெமாமான் மற்றும் டுங்குன் மாவட்டங்களில் மோசமான அடை மழை பெய்யும் என்று அம்மையம் அறிவித்துள்ளது.

அதோடு,கிளந்தான் மற்றும் பெர்லிஸ் மாநிலங்கள் முழுவதும் எச்சரிக்கை நிலையிலான அடை மழை பொழியும் என்று மெட்மலேசியா அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

பேராக்கின் ஹுலு பேராக் உட்பட கெடாவின் குபாங் பாசு, கோட்டா செட்டார், போகோக் சேனா, பதங் தேராப், பெண்டாங், சிக் மற்றும் பாலிங் ஆகிய மாவட்டங்களிலும் அதே வானிலை நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பகாங் மாநிலத்தின் கேமரன் மலை, லிப்பிஸ், ராவுப், பென்டாங், தெமெர்லோ மற்றும் பெரா ஆகிய மாவட்டங்களிலும் எச்சரிக்கை நிலையிலான மழை பொழிவு ஏற்படும் சாத்தியம் உள்ளது.

திரெங்கானுவின் பெசுட், செத்யு, குவாலா நெருஸ், ஹுலு திரெங்கானு, குவாலா திரெங்கானு மற்றும் மாராங், ஜோகூர் மாநிலத்தின் செகாமாட், மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி ஆகிய மாவட்டங்களிலும் எச்சரிக்கை நிலையிலான மழை பெய்யும் என்று மெட்மலேசியா கூறியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)