மாக்டெபர்க், 22 டிசம்பர் (பெர்னாமா) - ஜெர்மனியில், மாக்டெபர்க் நகரில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் நிகழ்ந்த பயங்கர கார் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இஸ்லாமொபோபிகுடன் தொடர்பு இருக்கலாம் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் காரை வேகமாகச் செலுத்தி ஐவர் உயிரிழக்கக் காரணமாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் அதன் ஓட்டுநர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் 200க்கும் மேற்பட்டோர் காயத்திற்கு ஆளாகினர்.
தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.
எனினும், ஜெர்மனியின் சவுதி அகதிகளுக்கான சேவையில் சந்தேக நபர் அதிருப்தி கொண்டிருப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)