BREAKING NEWS | PM Anwar expresses condolences to the family of Egyptian Islamic movement activist Youssef Nada who passed away today | |
புத்ராஜெயா, 12 டிசம்பர் (பெர்னாமா) -- வி.எல்.என் எனப்படும் வெளிநாட்டு விசா அங்கீகாரம் சம்பந்தப்பட்ட 40 ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக செய்த மேல்முறையீட்டை, தேசிய சட்டத்துறை, ஏ.ஜி.சி மீட்டுக்கொண்டது.
இதனால், 71 வயதுடைய அஹ்மட் சாஹிட்டை விடுவித்து விடுதலை செய்த ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலைநிறுத்தப்படுகிறது.
ஏ.ஜி.சியிடம், அஹ்மட் சாஹிட் பிரதிநிதித்துவ மனுவை சமர்ப்பித்ததை அடுத்து அவ்விண்ணப்பம் மீட்டுக் கொள்ளப்படுவதாக, இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது அத்துறையின் மேல்முறையீடு மற்றும் வழக்கு விசாரணைப் பிரிவு துணை தலைவர் டத்தோ யுசைனி அமீர் அப்துல் கரீம் மூவர் அடங்கிய நீதிபதி குழுவிடம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அரச தரப்பு செய்த மேல்முறையீட்டு விண்ணப்பத்தை அந்நீதிபதி குழுவிற்கு தலைமையேற்ற டத்தோ சே முகமட் ருசிமா தள்ளுபடி செய்தார்.
அஹ்மட் சாஹிட் நேரடியாக தமது பதவியைப் பயன்படுத்தி அக்குத்தகைகளை அளித்தததாக இவ்வழக்கில் எந்தவொரு வாக்குமூலமும் இல்லாதது, முழு வழக்கையும் ஆராய்ந்தப் பிறகு ஏ.ஜி.சி கண்டறிந்ததாக இன்றைய வழக்கு விசாரணையில் யுசைனி விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)