BREAKING NEWS   PM Anwar expresses condolences to the family of Egyptian Islamic movement activist Youssef Nada who passed away today | 
 பொது

இணையப் பாதுகாப்பு சட்டம் மலேசியர்களின் இணையப் பாதுகாப்பை மேம்படுத்தும்

12/12/2024 05:39 PM


கோலா திரெங்கானு, 12 டிசம்பர் (பெர்னாமா) -- 2024ஆம் ஆண்டு இணையப் பாதுகாப்பு சட்டம், நேற்று மக்களவையில் அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து ஒட்டுமொத்த மலேசிய மக்களின் இணையப் பாதுகாப்பு மேம்படுத்தப்படும்.

இச்சட்டம் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட மக்களின் பேச்சு சுதந்திரத்திற்குத் தடை விதிக்காது என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

''டிக்டாக், முகநூல் போன்ற தளங்களில் கண்டிப்பை வலியுறுத்துவதே இதன் நோக்கம். அவை மலேசியாவில் செயல்பட முடியும்.ஆனால், சில பாதுகாப்பு அம்சங்களை கவனிக்க வேண்டிய சூழல் உள்ளது, குறிப்பாக சிறார்களிடம். மோசடி செய்பவர்கள் மற்றும் இணைய சூதாட்டத்தை அவர்களின் தளங்களில் செயல்பட அனுமதிக்கப்படமாட்டார்கள், '' என்றார் அவர்.

இன்று, திரெங்கானுவில் பல்கலைக்கழக மாணவர்களுடனான 2024ஆம் ஆண்டு தேசிய ஊடகவியலாளர் தினம், ஹவானா கொண்டாட்டத்தில் சுல்தான் ஜைனல் ஆபிடின் பல்கலைக்கழக மாணவர்களுடனான கலந்துரையாடலின்போது ஃபஹ்மி ஃபட்சில் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)