பொது

தேசிய ஊடகவியலாளர் தின பயண நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்தது

12/12/2024 06:00 PM

கோலா திரெங்கானு, 12 டிசம்பர் (பெர்னாமா) -- 2024 தேசிய ஊடகவியலாளர் தினம் ஹவானாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பட்டதாரி மாணவர்கள் உடனான பயண நிகழ்ச்சி இன்று நிறைவடைந்துள்ளது.

இவ்வாண்டில் நாடு முழுவதும் 6 மண்டலங்களின் 16 பொது பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 2,000 மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் பெர்னாமா மூலம் தொடர்பு அமைச்சு உயர் ஆற்றல் கொண்ட கணினிகளையும் 65 அங்குல தொலைக்காட்சிகளையும் வழங்கியதாக பெர்னாமாவின் தலைமை செயல்முறை அதிகாரி, டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின் கூறினார்.

ஹவானா பயண நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் உரையாற்றிய டத்தின் படுக்கா நூருல் அஃபிடா வருங்காலத்தில் இந்தத் திட்டத்தை தொடரவும் விரிவுபடுத்தவும் பரிந்துரைத்தார்.

"இது ஒரு நல்ல அடைவுநிலை. ஏனெனில், மாணவர்களை நேரில் சந்தித்து ஊடகத்துறை குறித்து விவகாரங்களை பகிர்ந்து கொள்வது எங்களுக்கு எளிதான காரியம் அல்ல. எனவே, இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி இன்று நிறைவடைவதால், நான் ஒன்றைக் கேட்டுக் கொள்கிறேன். பாலிடெக்னிக்கில் பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தைத் தொடர தொடர்பு அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன், " என்றார் அவர்.

ஹவானாவின் செயலகமாக பெர்னாமாவிற்கு கிடைத்த நல்ல விமர்சனங்களினால் தாம் இப்பரிந்துரையை முன்வைப்பதாக நூருல் அஃபிடா குறிப்பிட்டார்.
 
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)