ஜாலான் அம்பாங், 12 டிசம்பர் (பெர்னாமா) -- அடுத்த ஆண்டு ஆசியான் மாநாட்டிற்கு தலைமையேற்கும் மலேசியா பரஸ்பர அங்கீகார ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதோடு, திறமையான மற்றும் ஒருங்கிணைந்த பணியை உருவாக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவும் உறுதிப் பூண்டுள்ளது.
இது வர்த்தக அதிகாரத்துவத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல் பாதுகாப்பான மருத்துவ சாதனங்களுக்கான அணுகுமுறைகளையும் அதிகரிப்பதால் நோயாளிகளின் பராமரிப்பு தரத்தை மேம்படுத்துவதோடு ஆசியான் வட்டாரத்தில் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஆசியான் மாநாட்டில் சுகாதார பாதுகாப்பு இலக்கவியலில் கவனம் செலுத்தப்படும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
எனவே, 2030ஆம் ஆண்டுக்கான புதிய தொழில்துறை திட்ட வியூகத்தின் கீழ் மருத்துவம் மற்றும் சுகாதார பாதுகாப்புத் துறையில் உயர் தொழில்நுட்ப உற்பத்தியின் மையமாக மலேசியா தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் என்றார் அவர்.
இன்று வியாழக்கிழமை அனைத்துலக மருத்துவ சாதனங்களுக்கான கண்காட்சி மற்றும் மாநாட்டின் நிறைவு விழாவை தொடக்கி வைத்து பேசிய போது அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)