கோலாலம்பூர், 14 டிசம்பர் (பெர்னாமா) - திரெங்கானு,'கெதெங்கா' கல்லூரியில் பயன்படுத்தப்படும் பாடத்திட்டம் தொடர்ந்து சரிபார்க்கப்படுவதோடு தொழில்துறை மற்றும் பொருளாதார தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட வேண்டும்.
தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப 'கெதெங்கா' கல்லூரியின் கற்றல் கற்பித்தல் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதே இதற்கு காரணம் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹமட் சாஹிட் ஹமிடி கூறினார்.
"அதேவேளையில், தொழில் மற்றும் பொருளாதாரத்தின் தேவைகளுக்கு ஏற்ப பாடத்திட்டம் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். 2015இல் இருந்து 1,557 பட்டதாரிகளை வெற்றிகரமாக உருவாக்கியதற்காக கெதெங்கா கல்லூரி மற்றும் அதன் கல்வியாளர்களுக்கு என் வாழ்த்துகள்,'' என்றார் அவர்.
Super: Datuk Seri Dr. Ahmad Zahid Hamidi / Timbalan Perdana Menteri
இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற 'கெதெங்கா' கல்லூரியின் 4ஆவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும்போது டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் அவ்வாறு தெரிவித்தார்.
உலகளாவிய சவால்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை எதிர்கொள்வதில் கல்வியின் சிறப்பு மற்றும் நாட்டின் மனித மூலதனத்தின் வளர்ச்சியை நோக்கி ஒரு தெளிவான இலக்கை 'கெதெங்கா' கல்லூரி வகுத்துத்துள்ளதாக புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)