அரசியல்

16ஆவது பொதுத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை வெல்ல தே.மு இலக்கு

15/12/2024 06:12 PM

பட்டர்வெர்த், 15 டிசம்பர் (பெர்னாமா) -- வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி பெரிய அளவிலான பங்களிப்பு மற்றும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய கூட்டணியாக இருக்க விரும்புகிறது.

அதில் 30 நாடாளுமன்ற தொகுதிகளை மட்டுமின்றி, மிக அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றும் கூட்டணியாக விளங்குவதில், அது இலக்காகக் கொண்டிருப்பதாக துணைப் பிரதமரும், தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

பினாங்கில் மட்டுமல்லாமல் மலேசியா முழுவதும் தேசிய முன்னணி மீண்டும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதாக,

இன்று பினாங்கு, மாநாடு, கலாச்சாரம் மற்றும் கலை அனைத்துலக மையத்தில் அம்மாநில தேசிய முன்னணி மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் கூறினார்.

தேசிய முன்னணி இழந்த இடங்களை மீண்டும் வெல்வதற்கு மக்களை கவனிப்பதே சிறந்தது என்ற தாம் நம்புவதாக சாஹிட் தெரிவித்தார்.

அதேவேளையில், தேசிய முன்னணியில் தங்களி காலம் முடிந்துவிட்டதாக எண்ணும் உச்சமன்றத்தினரும் உறுப்பினர்களும் இதர கட்சிகளில் இணைவதற்கு குறுக்கு வழியை அணுகக்கூடாது என்று அவர் அறிவுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)