கோலாலம்பூர், 15 டிசம்பர் (பெர்னாமா) -- லங்காவிக்குச் செல்லும் ஃபெரி சேவைக்கான பயணக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பில், லங்காவி ஃபெரி லைன் வென்ச்சர்ஸ் நிறுவனம் மேற்கொண்ட அவசர நடவடிக்கை தமக்கு வருத்தத்தை அளிப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் குடிமக்கள் மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை உட்படுத்திய இந்த நடவடிக்கையில் ஈடுபடும் ஃபெரி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், டீசல் மானியங்களைப் பெறத் தகுதியற்றவர்கள் என்று அந்தோணி லோக் தமது முகநூல் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை நிதி அமைச்சிடமிருந்து கொள்கை ரீதியிலான ஒப்புதலைப் பெற்றுள்ளதாகவும்,
2025 ஜனவரி 1 முதல், லங்காவி உள்ளிட்ட நாட்டின் முக்கிய தீவுகளின் FERI சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு டீசல் மானியம் வழங்குவதற்கான உதவியை வழங்குவது குறித்தும் அவர் தெரிவித்தார்.
எனவே, வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக மீட்டுக் கொள்ளுவது அனைத்து தரப்பினருக்கும் நல்லது என்றும், விரைவில் போக்குவரத்து அமைச்சைச் சந்தித்து கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரை லோக் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)