பொது

எம்சி.எம்சியின் ஒத்துழைப்புடன் 56,294 மோசடி குறித்த உள்ளடக்கங்கள் அகற்றம்

16/12/2024 05:25 PM

கோலாலம்பூர், 16 டிசம்பர் (பெர்னாமா) -- இவ்வாண்டு ஜனவரி தொடங்கி டிசம்பர் முதலாம் தேதி வரையில் இணையக் குற்றங்களை ஒழிக்கும் முயற்சியாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சி.எம்சியின் ஒத்துழைப்புடன் 56 ஆயிரத்து 294 மோசடி குறித்த உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டுள்ளன.

2022-ஆம் ஆண்டில் இருந்த 242 மற்றும் 2023ஆம் ஆண்டில் இருந்த 6,297 அகற்றப்பட்ட உள்ளடக்கங்களைக் காட்டிலும் தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக, தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

இவ்வாண்டு ஜனவரி தொடங்கி அக்டோபர் மாதம் வரை இணைய மோசடி காரணமாக 122 கோடியே 40 லட்சம் ரிங்கிட் இழப்பை மலேசியா பதிவு செய்திருப்பதைத் தியோ நீ சிங் சுட்டிக்காட்டினார்.

''மோசடி உள்ளடக்கத்தை அகற்ற அமைச்சு முயற்சிக்கவில்லை என்று சொல்ல முடியாது. 2022-ஆம் ஆண்டில் 242 மோசடி குறித்த உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டன. அதே நேரத்தில் அதை ஒரு பயனுள்ள அணுகுமுறையாக நாங்கள் பார்க்கவில்லை, '' என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூரில் சமூகம் மற்றும் பொருளாதார ஆராய்ச்சி, செரியின் முயற்சியில் நடைபெற்ற "Teens, Tech and Trust: Navigating Social Media in Malaysia" என்ற தலைப்பிலான வெள்ளை அறிக்கையை அறிமுகம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதனைக் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)