சிங்கப்பூர், 16 டிசம்பர் (பெர்னாமா) -- சிங்கப்பூரில் உணவு விநியோக பாதுகாப்பு நடைமுறைகளை உணவகங்கள் கடுமையாக்கி வருகின்றன.
பண்டிகை காலங்களில், உணவு விநியோகம் செய்வதற்கான தேவைகள் 20 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்பதால் அதை சமாளிக்கத் தகுதியுள்ள ஊழியர்களை சிங்கப்பூர் உணவகங்கள் வேலைக்கு அமர்த்துகின்றன.
ஊழியர்களுக்கான அட்டவணையைத் தயார் செய்து வைப்பதுடன், சுகாதாரம் குறித்து பயிற்சி பெற்ற பகுதிநேர ஊழியர்களை பணியில் சேர்க்கின்றனர்.
அதன் மூலம் அனைத்து வேலைகளும் சுமுகமாக நடைபெறுவதோடு, சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவது உறுதி செய்ய முடிகின்றது.
அதோடு மட்டுமின்றி, சில உணவகத்தில் உணவுகள் தயார் செய்து வைத்தவுடன் வெப்பநிலை கண்காணிக்கும் முறையும் பயன்படுத்தப்படுகின்றது.
அதன் மூலம் நச்சுணவு சிக்கல் ஏற்படாமல் இருப்பதை தடுக்க முடிகின்றது.
இதனிடையே, சிங்கப்பூரில் இவ்வாண்டு மட்டும் சுமார் 2,500 உணவகங்கள் மூடப்பட்டதாக, பான மேலாண்மைச் சங்கம் அறிவித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)