பெண்டாங், 16 டிசம்பர் (பெர்னாமா) -- கடந்த அக்டோபர் எட்டாம் தேதி, பெண்டாங், ஜாலான் தொக்காய், கம்போங் ரம்பாயில் உள்ள 'நாசி லெமாக்' விற்கும் கடையில் விட்டுச் செல்லப்பட்ட ஆண் குழந்தையின் பெற்றோர், வாரிசு அல்லது அக்குழந்தைக்கு பொறுப்பான தரப்பை பெண்டாங் மாவட்ட சமூகநலத் துறை, ஜே.கே.எம் அடையாளம் கண்டு வருகிறது.
அக்குழந்தை குறித்து தனது தரப்பிற்கு ஊடகச் செய்தியின் மூலம் தெரிய வந்ததாக அறிக்கை ஒன்றின் வழி ஜே.கே.எம் தெரிவித்தது.
கண்டெடுக்கப்பட்டபோது அக்குழந்தை தொப்புள் கொடி வெட்டப்படாத நிலையிலும் எந்தவோர் ஆவணமும் இல்லாத நிலையிலும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
அக்குழந்தையைக் கண்டெடுத்தவர் போலீஸ் புகார் அளித்துவிட்டதையும் அத்துறை உறுதிபடுத்தியது.
அக்குழந்தை குறித்த தகவல் அறிந்தவர்கள் பெண்டாங் மாவட்ட ஜே.கே.எம்-ஐ 04-7596235 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு அத்துறை கேட்டுக்கொண்டது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]