உலகம்

இலங்கை அதிபர் இந்தியாவிற்கு முதல் அலுவல் பயணம்

17/12/2024 05:08 PM

புதுடெல்லி, 17 டிசம்பர் (பெர்னாமா) --   இலங்கை அதிபராக பொருப்பேற்றப் பிறகு, அநுர குமார திசநாயக்க தமது முதல் அலுவல் பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார்.

புதுடெல்லி வந்தடைந்த அவரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

அநுர குமார திசநாயக்கவுக்கு அதிகாரப்பூர்வ வரவேற்று வழங்கப்பட்டது.

அதன் பின்னர், இரு நாட்டுத் தலைவர்களும் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அக்கூட்டத்தில் மனிதாபிமான அடிப்படையில் தமிழ்நாடு மீனவர்கள் விவகாரத்தை இலங்கை அணுக வேண்டும் என்று மோடி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனிடையே, பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவி வழங்கிய இந்தியாவைத் தமது அரசாங்கம் எப்போது நன்றி பாராட்டும் என்று அநுர குமார திசநாயக்க தெரிவித்தார்.

இலங்கையில் அதிபராக தேர்வு செய்யப்படும் ஒருவர், தமது முதலாவது அலுவல் பயணமாக அண்டை நாடான இந்தியாவுக்கு செல்வது வழக்கமான ஒன்றாக காணப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)