பொது

வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ள புதிய பள்ளிகளை உயரமான பகுதிகளில் கட்ட பரிசீலனை

17/12/2024 04:11 PM

ஆராவ், 17 டிசம்பர் (பெர்னாமா) -- வெள்ளப் பேரிடர் காலங்களில் பள்ளிகள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்யவதற்கு வரும் காலங்களில், புதிய பள்ளிகளை கட்டுவதற்கு பாதுகாப்பான மற்றும் உயரமான பகுதிகளை அரசாங்கம் பரிசீலிக்கும்.

வெள்ளத்தின்போது பள்ளிகள் தற்காலிக நிவாரண மையங்களாக பயன்படுத்தபடுவதால் புதிய பள்ளியை கட்டுவதற்கான இடத்தை உறுதி செய்யும்போது பாதுகாப்பான பகுதிகளில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சர் அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

வெள்ளம் மற்றும் இதர பேரிடர் காலங்களில் பள்ளியின் கற்றல் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பள்ளி உதவியாக இருப்பது கவனிக்கப்பட வேண்டும் என்று ஃபட்லினா சிடேக் கூறினார்.

பெர்லிஸ் ஆராவில், ஆராவ் தேசிய இஸ்லாமிய இடைநிலை பள்ளியில் இரண்டு புதிய கட்டிட ஒப்படைப்பு விழாவில் கலந்துகொண்ட பின்னர் ஃபட்லினா அதனைக் கூறினார்.

ஒரு கோடியே 90 லட்சம் ரிங்கிட் செலவில் மாணவர் தங்கும் விடுதிகள், சுராவ், கழிப்பறைகள் மற்றும் பாதுகாவலர் அலுவலகம் போன்ற வசதிகளுடன் இந்த இரண்டு புதிய கட்டிடங்கள் கடந்த அக்டோபரில் கட்டி முடிக்கப்பட்டது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]