பொது

ஆசியான் ஆலோசனைக் குழு; அதிகாரப்பூர்வமற்ற முறையில் கருத்துகளை வழங்கும்

17/12/2024 05:50 PM

புத்ராஜெயா, 17 டிசம்பர் (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டு ஆசியானுக்கு தலைமையேற்கும் மலேசியாவிற்கு உதவுவதற்காக உருவாக்கப்படவிருக்கும் ஆசியான் ஆலோசனைக் குழு வியூக ஒத்துழைப்பு நடவடிக்கையாக கருதப்படுப்படுகிறது.

ஆசியான் நாடுகளைச் சேர்ந்த பல அனுபவமிக்க தலைவர்களைக் கொண்டு நிறுவப்படும் அக்குழு அதிகாரப்பூர்வமற்ற முறையில் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கும் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் விளக்கினார்.

''பிரதமர் கடந்த 3-4 வாரங்களுக்கு முன்பு தமது விருப்பத்தைத் தெரிவித்தார். மற்ற ஆசியான் நாட்டுத் தலைவர்களுக்கும் முறையே தெரிவித்து விட்டார். அது அவர்களுக்குப் புரிந்துவிட்டதாகவும், அம்முடிவு குறித்து அவர்களுக்குப் பிரச்சனைகள் இல்லை என்று கூறியதாகப் பிரதமர் கூறினார். காரணம், இது ஒரு அதிகாரப்பூர்வமற்ற முறையில் வழங்கும் ஆலோசனை மற்றும் கட்டுப்பாடற்ற ஆலோசனை. உத்தரவு அல்ல,'' என்றார் அவர். 

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற தொடர்பு அமைச்சின் மாதந்திர கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஃபஹ்மி செய்தியாளர்களிடம் பேசினார்.

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவாட்டின் நியமனம் அதிகாரப்பூர்வமற்றதாகவும், அவர் வழங்கு அலோசனைகள் கட்டுப்படாத முறையில் அமைந்தாலும் அடுத்த 12 மாதங்களுக்கு ஆசியானுக்கு தலைவராக இருக்கும் டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு உதவுவதில் அவரின் பங்கு அவசியம் என்று ஃபஹ்மி தெளிவுப்படுத்தினார்.

--  பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]