பொது

நெகிழி தொடர்பான சட்டத்தை உருவாக்கும் அவசியம் ஆராயப்படுகிறது

17/12/2024 06:19 PM

கோலாலம்பூர், 17 டிசம்பர் (பெர்னாமா) -- ஆர்.எம்.கே13 எனப்படும் 13-வது மலேசியா திட்டத்தின் கீழ் முழுமையான ஆய்வொன்றின் மூலம் நெகிழி (பிளாஸ்டிக்) தொடர்பான சட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

தற்போதுள்ள தேசிய நெகிழி கொள்கை முழுமையாகப் பின்பற்றப்படாததால் இந்த ஆய்வு முக்கியம் என்று இயற்கைவளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் தெரிவித்தார்.

அது தொடர்பில், இன்று மேலவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிக் அவ்வாறு பதிலளித்தார்.

நெகிழிக் கழிவுகளின் மறுசுழற்சி நிர்வகிப்புக்கு 1974-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தர சட்டத்தை அமைச்சு கடுமையாக்கும் என்றும் நிக் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]