பொது

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் காய்கறிகளின் விலை மீண்டும் சீரடையலாம்

18/12/2024 05:47 PM

தும்பாட், 18 டிசம்பர் (பெர்னாமா) - வடகிழக்கு பருவமழை நிறைவடைந்தப் பின்னர், அடுத்த ஆண்டில் மார்ச் மாதம் உள்நாட்டு சந்தையில் காய்கறிகளின் விலை மீண்டும் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலையற்ற வானிலையின் காரணமாக காய்கறி விநியோகம் குறைந்ததோடு அதன் விலையும் அதிகரித்துள்ளதை விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தெரிவித்தார். 

''இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால், காய்கறி விலை நிச்சயம் ஏற்றம் இறக்கம் காணும். அதுதான் தற்போதுள்ள சூழ்நிலை. நாங்கள் ஃபாமாவுடன் இணைந்து கையாள முயற்சிப்போம். இச்சூழ்நிலை நிகர் செய்ய ஃபாமா பங்காற்றும். வழக்கமாக இதுபோன்ற சூழ்நிலை அதிக நாட்களுக்கு ஏற்படாது,'' என்றார் அவர்.

இன்று, பூங்கா ராயா பகுதி விவசாயிகள் சங்கக் கட்டிடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு அவ்வாறு கூறினார்.

முன்னதாக, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளந்தானில் உள்ள 10,628 விவசாயிகளுக்கு 63 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய இரண்டாம் கட்ட  சிறப்பு உதவித் தொகையை அவர் வழங்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)