கோலாலம்பூர், 18 டிசம்பர் (பெர்னாமா) - புக்கிட் அமான் வனவிலங்கு குற்றப்பிரிவு துறை இவ்வாண்டு 136 வழக்குப் பதிவுகளுக்குத் தீர்வு கண்டுள்ளதாக தேசிய போலீஸ்படைத் தலைவர் ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.
40 கோடி ரிங்கிட்டுக்கும் அதிகமான பொருட்களும் இதன்மூலமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கூட்டரசு வனவிலங்கு பிரிவு நடத்திய 34 சோதனை நடவடிக்கைகளில், 76 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், கூட்டரசு வனவிலங்கு பிரிவு மூன்று கோடியே 71 லட்சம் ரிங்கிட் சொத்துக்களைப் பறிமுதல் செய்தனர்.
அதனுடன், பொது பிரிவு துறையின் கைது நடவடிக்கையின் மூலம் 2 கோடியே 79 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)