பாலிக் பூலாவ், 18 டிசம்பர் (பெர்னாமா) -- கோலா சுங்கை பினாங்கில் நேற்று படகு ஒன்று மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் நிலையில், இரு மீனவர்கள் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 11.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் 22 வயதுடைய முஹ்மட் இக்மால் ஹகிமி மற்றும் 25 வயதுடைய நோர் ஹஸ்ரூல் அப்துல்லா ஆகியோரும் காணவில்லை என்று கூறப்படுகிறது.
தேடல் மற்றும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாலிக் பூலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முஹ்மட் பக்தியார் வான் சிக் தெரிவித்தார்.
முன்னதாக, அவர்கள் இருவரும் சென்ற படகின் இயந்திரம் பழுதடைந்ததாகவும், அந்நேரத்தில் புயல் வீசியதாகவும் முதல் கட்ட தகவல் கிடைத்திருப்பதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)