டோஹா, 18 டிசம்பர் (பெர்னாமா) -- 2024 ஆம் ஆண்டுக்கான , அனைத்து காற்பந்து சம்மேளனம் பிஃபா-வின் சிறந்த கோலுக்கான புஸ்காஸ் விருதை மென்செஸ்டர் யுனைடெட் மத்திய திடல் ஆட்டக்காரர் அலெஜெண்ட்ரோ கர்னாச்சோ வென்றார்.
கடந்த ஆண்டில் நவம்பர் மாதம், இங்கிலீஷ் பிரீமியர் லீக் காற்பந்துப் போட்டியில் எவெர்டனுக்கு எதிரான ஆட்டத்தில் அலெஜெண்ட்ரோ அடித்த கோல், அவருக்கு புஸ்காஸ் விருதைப் பெற்று தந்துள்ளது.
குடிசன் பார்க் அரங்கில் நடைபெற்ற அந்த ஆட்டத்தின் 3 ஆவது நிமிடத்தில் அலெஜெண்ட்ரோ அந்த கோலை அடித்தார்.
அதேபோன்ற கோலை 2011 ஆம் ஆண்டில் மென்செஸ்டர் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் வெயின் ரூனி போட்டார்.
கடந்த பருவத்தில் 10 கோல்களை அடித்திருந்த அலெஜெண்ட்ரோ இந்த பருவத்தில் இதுவரை எட்டு கோல்களைப் போட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)