பொது

பாலஸ்தீன மக்கள் அறக்கட்டளையின் மூலம்  9 கோடியே 90 லட்சம் ரிங்கிட்டை மலேசியா வசூலித்துள்ளது

18/12/2024 05:52 PM

புத்ராஜெயா, 18 டிசம்பர் (பெர்னாமா) - பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை தொடர்ந்து ஆதரிக்க உறுதிப் பூண்டிருக்கும்  மலேசியா பாலஸ்தீன மக்கள் அறக்கட்டளையின் மூலம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி 9 கோடியே 90 லட்சம் ரிங்கிட்டை வசூலித்துள்ளது

அல் அக்சா மசூதி பராமரிப்பு, மலேசியாவில் பயிலும் பாலஸ்தீன மாணவர்களுக்கான உதவிகள் மற்றும் அனைத்துலக நிறுவனங்களுடனான மனிதாபிமான பணிகளுக்கு அந்நிதி பயன்படுவதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.

காசாவிற்கு வழங்கப்படும் உதவி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் ஜோர்டானின் HASHEMITE அரசாங்க தலைமையிலான  திட்டத்திற்கு, அண்மையில் 50 லட்சம் ரிங்கிட் நன்கொடையாக வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

இன்று புதன்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற்ற பாலஸ்தீனத்திற்கான மலேசியாவின் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசியபோது அவர் அதனைக் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)