வானுவாட், 18 டிசம்பர் (பெர்னாமா) - வானுவாட்டின் தலைநகரான போர்ட் விலாவில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்ததது 14 பேர் உயிரிழந்த வேளையில் 200 பேர் காயமடைந்துள்ளனர்.
முழுவதுமாக இடிந்து விழுந்த மூன்று அடுக்கு கடை உட்பட இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை தேடும் பணிகளை மீட்புக் குழுவினர் இரவு முழுவதும் மேற்கொண்டனர்.
இடிபாடுகளுக்கு அடியில் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் குரல் தொடர்ந்து கேட்கும் பட்சத்தில் நிலைமை மோசமடைந்தது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மூவர் வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் கடுமையான காயங்களினால் உயிரிழந்தார்.
இதனிடையே, போர்ட் விலாவில் நான்கு முதன்மை கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
அதோடு, நிலச்சரிவில் ஒரு பேருந்து புதையுண்ட நிலையில் இரு பாலங்கள் சேதமடைந்தன.
போர்ட் விலாவில் உள்ள முதன்மை மருத்துவமனை சேதமடைந்துள்ள வேளையில், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதாக வெளியே அவசரக் கூடாரங்கள் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் சுமார் 116,000 பேர்வரை பாதிக்கப்படலாம் என்றும் பரவலான உள்கட்டமைப்பு சேதம் நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை, ஐநாவின் ஆரம்ப அறிக்கை கூறுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)