ஒட்டாவா, 18 டிசம்பர் (பெர்னாமா) - லிபரல் கட்சியைச் சேர்ந்த நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேன்ட் கடந்த திங்கட்கிழமை பதவி விலகியதைத் தொடர்ந்து அந்த ஆளும் கட்சியில் உட்பூசல் நிலவுவதை அந்நாட்டு பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ ஒப்புக் கொண்டுள்ளார்.
பெரும்பாலான குடும்பங்களைப் போலவே, சில சமயங்களில் விடுமுறை நாட்களில் தங்களுக்குள்ளும் சண்டைகள் ஏற்படும் என்றும் தங்கள் தரப்பு அதை கையாள்வதற்கான வழிகளை மேற்கொள்ளும் என்று ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.
ஃப்ரீலேன்ட்டின் பதவி விலகலைத் தொடர்ந்து, ட்ரூடோவும் பதவி விலக வேண்டும் என்று LIberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தி வருவதைத் தொடர்ந்து ட்ரூடோ அவ்வாறு கருத்துரைத்தார்.
கனடிய ஏற்றுமதிகள் மீது தடைகளை விதிக்கக்கூடிய அமெரிக்கப் புதிய நிர்வாகம் பதவியேற்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஃப்ரீலேன்ட் இந்தப் பதவி விலகலை அறிவித்துள்ளார்.
நாட்டின் நிதி அமைச்சராகவும் துணை பிரதமராகவும் இருந்த 56 வயதான FREELAND தனது பதவியில் இருந்து விலகியுள்ளது ட்ரூடோவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
கனடா பொருளாதார ரீதியில், கடும் சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல் ட்ரூடோ தனிப்பட்ட நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக ஃப்ரீலேன்ட் குற்றம்சாட்டியுள்ளார்.
2015-ஆம் ஆண்டு நவம்பரில் பதவி ஏற்றதிலிருந்து TRUDEAU எதிர்கொள்ளும் மிகப்பெரிய நெருக்கடிகளில் ஃப்ரீலேன்ட்டின் இந்த பதவி விலகும் ஒன்றாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)