மாஸ்கோ, 18 டிசம்பர் (பெர்னாமா) - ரஷ்யாவின் மாஸ்கோவில், ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில், இராணுவ உயரதிகாரி இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டார்.
அவர் ரஷ்ய அணுவாயுத, உயிரியல், இரசாயன தற்காப்புப் படையின் தலைவர் என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்தது.
தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை உக்ரேன் மீது பயன்படுத்தியதாக அந்நாட்டு நீதித்துறை கிரில்லோவ் மீது குற்றம் சாட்டியதை அடுத்து தற்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மின்சார மோட்டார் சைக்கிளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததை அடுத்து இடிபாடுகளில் இரத்தக் கறை படிந்த இரு உடல்களை ரஷ்ய அதிகார தரப்பு அடையாளம் கண்டது.
கிரில்லோவ் கொல்லப்பட்டதற்கு உக்ரேன் காரணம் என்று கீவ் உளவுத்துறை வழி தகவல் கசிந்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)