விளையாட்டு

சூப்பர் லீக் கிண்ணம்: ஜே.டி,தி வெற்றி

18/12/2024 07:10 PM

ஜோகூர் பாரு, 18 டிசம்பர் (பெர்னாமா) -- மலேசிய சூப்பர் லீக் கிண்ண காற்பந்து போட்டியில், நடப்பு வெற்றியாளரான ஜோகூரின் ஜே.டி,தி 3-1 என்ற கோல்களில் ஶ்ரீ பகாங் எஃப்.சி-ஐ நேற்று வீழ்த்தியது.

சொந்த இடமான, சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நடந்த இந்த ஆட்டத்தில் வெற்றி அடைந்ததன் மூலம், தோல்வி காணாத தனது சாதனையை ஜே.டி,தி தற்காத்துக் கொண்டது.

ஆட்டத்தின் முதல் பாதி இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்க முடியாமல் முடிவடைந்தது.

இரண்டாம் பாதியின் 48-வது நிமிடத்தில் ஜே.டி,தி அதன் முதல் கோலை அடித்து முன்னிலை வகித்தது.

அதனை அடுத்த நான்கு நிமிடங்களில், பெர்க்சன் டா சில்வா ஜே.டி,தி-யின் இரண்டாம் கோலைப் போட்டார்.

ஶ்ரீ பகாங் எஃப்.சி-இன் ஒரே கோல் 53-வது நிமிடத்தில் அடிக்கப்பட்டது.

2-1 என்ற நிலையில் இருந்த ஆட்டத்தை சமன் செய்ய ஶ்ரீ பகாங் எஃப்.சி போராடிய வேளையில், மேலும் ஒரு கோலை அடித்து 3-1 என்று ஆட்டத்தை அதற்கு சாதகமாய் முடித்தது ஜே.டி,தி.

இந்த வெற்றியின் வழி, ஜே.டி,தி 46 புள்ளிகளோடு பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)