கட்டார், 18 டிசம்பர் (பெர்னாமா) -- அனைத்துலக காற்பந்து சம்மேளனம் ஃபிபா, 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த காற்பந்து ஆட்டக்காரராக ரியல் மாட்ரிட்டின் வினிசியஸ் ஜூனியரை தேர்வு செய்துள்ளது.
அதேவேளையில், பார்சிலோனாவின் மத்திய திடல் ஆட்டக்காரர் அயிட்டனா பொன்மதிசிறந்த மகளிர் ஆட்டக்காரராக இரண்டாவது முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கட்டாரின் டோஹாவில் செவ்வாய்கிழமை நடைபெற்ற விருது விழாவில் 24 வயதுடைய வினிசியஸ் சிறந்த ஆட்டக்காரருக்கான விருது வழங்கப்பட்டது.
2 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற Ballon d'Or விருது விழாவில் வினிசியஸ் சிறந்த ஆட்டக்காரரான விருதை மென்செஸ்டர் சிட்டியின் ரோட்ரியிடம் பறிகொடுத்தார்.
தற்போது, 2024 ஆம் ஆண்டின் சிறந்த ஆட்டக்காரர் விருதினை வென்று தமது சாதனையை அவரோடு சமன் செய்துள்ளார்.
கடந்த பருவத்தில் ரியல் மெட்ரிட் ஸ்பெயின் லா லீகா கிண்ணத்தையும் ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணத்தையும் வெல்ல வினிசியஸ் உறுதுணையாக இருந்தார்.
அனைத்து போட்டிகளின் 39 ஆட்டங்களில் 24 கோல்களை அடித்ததோடு, கோல் போடுதற்கு 11 உதவிகளைச் செய்திருக்கின்றார்.
இதனிடையே, ஸ்பெயினைச் சேர்ந்த 26 வயதுடைய அயிட்டனா பொன்மதி, இரு Ballon d'Or விருதுகளை வென்றதோடு, இரண்டாவது ஆண்டாக சிறந்த மகளிர் ஆட்டக்காரராக தேர்வாகி இருக்கின்றார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)