ஹனோய், 19 டிசம்பர் (பெர்னாமா) -- வியட்நாம் தலைநகர் ஹனோயில் உள்ள karaoke மனமகிழ் மையம் ஒன்றில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த வேளையில், இருவர் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இவ்விபத்து வேண்டுமென்றே செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
மேற்கு ஹனோயில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்று தீயில் எரிந்து சாம்பலாகி, அப்பகுதியைச் சுற்றிலும் உலோகக் குப்பைகள் சிதறிக்கிடப்பது போன்ற புகைப்படங்கள் அரசு ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தன.
முன்னதாக, அக்கட்டிடத்தில் பலர் சிக்கியுள்ளதாக தங்கள் தரப்பிற்குத் தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், எழுவரைக் காப்பற்றினர்.
அதில் இருவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வேளையில், 11 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன.
அந்த மனமகிழ் மையத்தை வேண்டுமென்றே தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களை ஹனோய் போலீஸ் கைது செய்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)