மர்மன்ஸ்க், 19 டிசம்பர் (பெர்னாமா) -- ரஷ்யாவின் மர்மன்ஸ்க் வட்டாரத்தில் சரக்கு இரயில் ஒன்று மர்மன்ஸ்க்கில் இருந்து St. Petersburg-ஐ நோக்கிச் சென்ற பயணிகள் இரயிலுடன் மோதியதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் மூவருக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யாவின் அவசர நிலை அமைச்சு தெரிவித்துள்ளது.
தடம் புரண்ட அந்த இரயில் பெட்டிகளின் காணொளிகளை வடமேற்கு போக்குவரத்து வழக்கறிஞர் அலுவலகம் பகிர்ந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து அறிந்த வட்டார ஆளுநர், என்ரி சிபிஸ், மாஸ்கோவிற்கு மேற்கொண்ட வர்த்தக பயணத்தைத் தொடராமல் மீண்டும் மர்மன்ஸ்க் வட்டாரத்திற்குத் திரும்பினார்.
மீட்புப் பணியாளர்களும் மருத்துவப் பணியாளர்களும், சம்பவ இடத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பயணிகள் இரயிலில் 326 பேர் இருந்ததாகவும், குறைந்தது ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என்று வட்டார அவசர சேவை பிரிவு கூறியுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான தாஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சரக்கு ரயிலில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)