புத்ராஜெயா, 19 டிசம்பர் (பெர்னாமா) -- அண்மையில் மூன்று மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரின்போது எஸ்பிஎம் மலாய் வாய்மொழி சோதனையை ஒத்தி வைக்க வேண்டாம் என்று முடிவெடுப்பதற்கு மிகவும் கடினமாக இருந்ததைக் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் ஒப்புக் கொண்டார்.
இருப்பினும், அக்கடினமான முடிவின் பலனாக ஒட்டுமொத்தமாக அத்தேர்வுக்கு வருகையளித்தவர்களின் எண்ணிக்கை 97.49 விழுக்காடாக பதிவாகியதாக அவர் குறிப்பிட்டார்.
''நான் தனியாக இந்த முடிவை எடுக்கவில்லை. மாறாக, இது குறித்து நாங்கள் பலமுறை கலந்தாலோசித்திருந்தோம். நான் கிளந்தானில் இருந்த நாள் முழுவதும் கிளந்தான் கல்வித் துறைக்கான ஆட்சிகுழு உறுப்பினர் என்னுடன் இருந்தார். என்னுடன் இருந்த டத்தோ சம்ரிக்குத் தெரியும், அவர் என்னை நிறுத்தச் சொன்னாரா என்று. அப்படி எதுவும் இல்லை, '' என்றார் அவர்.
இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்த SPM மலாய் வாய்மொழி சோதனைக்கு கிளந்தானில் 97.54 விழுக்காட்டினரும் திரெங்கானு மற்றும் கெடாவிலிருந்து முறையே 98.01 மற்றும் 97.94 விழுக்காட்டு மாணவர்களும் வந்திருந்தாக ஃபட்லினா கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)