பொது

பகிர்தல் நடைமுறைகளைக் கையாள்வதில் சில சட்டத் தேவைகளை ஆய்வு செய்ய தயார்

19/12/2024 06:40 PM

கோலாலம்பூர், 19 டிசம்பர் (பெர்னாமா) -- பகிர்தல் நடைமுறைகளைக் கையாள்வதில் குறிப்பிட்ட சில சட்டத் தேவைகளை ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது.

நாட்டில் உள்ள சிறார்களைச் சுயநலத்திற்குப் பயன்படுத்தப்படாமல் இருப்பதைத் தடுப்பது, அவர்களுக்கான தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் கூறினார்.

"இதுவரை (மலேசியா) பகிர்தல் நடைமுறைக் குறித்து எந்தவொரு சட்ட மசோதாவும் இல்லை. ஆனால் பங்குதாரர்கள், அரசு சாரா நிறுவனங்கள், மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு போன்ற அமைச்சுகளுடன் பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். இந்த பிரச்சனை குறித்து ஒரு சிறப்பு சட்ட மசோதாவைக் கொண்டு வர வேண்டுமா, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் நாங்கள் ஒரு உடன்பாட்டையும் ஒருமித்த கருத்தையும் பெற வேண்டும், " என்றார் அவர்.

இணையப் பாதுகாப்பில் அரசாங்கத்தின் பங்களிப்பு மற்றும் 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம், சட்டம் 588இன் பங்கு என்ற தலைப்பில் இன்று, பெர்னாமா வானொலியின் சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட பின்னர் அவர் அதனைக் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)