லாஸ் ஏஞ்சலர்ஸ், 19 டிசம்பர் (பெர்னாமா) -- கலிபோர்னியாவில் மோசமாக பரவி வரும் H5N1 பறவைக் காய்ச்சலைத் தொடர்ந்து அதன் ஆளுநர் கவின் நியூசோம் இன்று அவசரகால நிலையை அறிவித்தார்.
கோல்டன் மாநிலத்தில் 34 பேர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள பண்ணைகளில் பால் மாடுகளில் இருந்து இத்தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கண்காணிப்பை மேலும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும், கிருமியின் பரவலைக் கட்டுப்படுத்தும் வலுவான அணுகுமுறையை இது குறிப்பதாகவும் ஆளுநர் அலுவலகம் குறிப்பிட்டிருந்தது.
கலிபோர்னியாவைப் பொருத்தமட்டில் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இக்காய்ச்சல் பரவதாக இன்று வரை கண்டறியப்படவில்லை.
மேலும் இதில் பாதிக்கப்பட்ட அனைவரும், கால்நடைகளின் கிருமித் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளதாக, ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, H5N1 கிருமித் தொற்று 16 மாநிலங்களில் உள்ள பசு மாடுகளுக்கு பரவியுள்ளது.
மேலும், இவ்வாண்டு மார்ச் மாதத்தில், டெக்சாஸ் மற்றும் கன்சாசிலே இத்தொற்று முதன்முறையாக கண்டறியப்பட்டதாக, அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையமான சி.டி.சியின் தரவுகள் கூறுகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)