செலாயாங் , 19 டிசம்பர் (பெர்னாமா) -- நேற்றிரவு, செலாயாங் நகராண்மைக்கழக அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிடிஆர்எம் 5-0 என்ற கோல் எண்ணிக்கையில் கிளந்தானை வீழ்த்தியது.
இவ்வாட்டாத்தில் இஃபெடையோ ஒலுசெகுன்அடித்த கோல்கள் பிடிஆர்எம் வெற்றிக்குத் தோள் கொடுத்தன.
இந்த வெற்றியின் வழி பிடிஆர்எம், 21 புள்ளிகளோடு பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது.
ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் பிடிஆர்எம் மத்திய திடல் ஆட்டக்காரர் இஃபெடையோ தமது அணிக்கான முதல் கோலை அடித்தார்.
அதே உற்சாகத்துடன் விளையாடி ஆட்டத்தை ஆக்கிரமித்ததால் இரண்டாம் கோல் 32வது நிமிடத்தில் அதே ஆட்டக்காரரரால் போடப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 32ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோல் போடப்பட்டு, அவ்வணிக்கான வெற்றி மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது.
ஆட்டத்தின் 66-ஆவது நிமிடத்தில் முஹமட் ஷஹரல் நான்காவது கோலை அடித்தாலும் பிடிஆர்எமின் தாக்குதல் ஆட்டமும் பாதிப்படையவில்லை.
மாறாக, கிளந்தான் அணியின் கோல் காவலர் முகமட் ஃபிக்ரி சே சோவின் சறுக்கல் ஆட்டத்தின் ஐந்தாவது கோலைப் போடுவதற்குப் பிடிஆர்எமிற்குச் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)