உலகம்

டெக்சஸ்: இரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் பலி

20/12/2024 04:21 PM

டெக்சஸ், 20 டிசம்பர் (பெர்னாமா) --   அமெரிக்கா, டெக்சஸ் மாநிலத்தில் இரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

மேலும் மூவர் காயமடைந்தனர்.

மேற்கு டெக்சாஸ் நகரில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு சரக்கு ரயில் மற்றொரு இரயிலுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரயில் தடம் புரண்டு அருகில் இருந்த கட்டிடத்தை மோதியது.

புதன்கிழமை மாலை மணி 5-க்கு இவ்விபத்து நிகழ்ந்தது.

இரயில் தடம் புரண்டதில் அபாயகரமான பொருள்கள் எதுவும் கசியவில்லை என்றாலும், அந்த இரயில் ஏற்றி வந்த டீசல் கசிந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் முழுமையான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)