உலகம்

தைவான்: கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் பலி

20/12/2024 03:02 PM

தைசுங், 20 டிசம்பர் (பெர்னாமா) - தைவான், தைசுங் நகரில் உள்ள கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

நேற்று மாலை ஏற்பட்ட இவ்விபத்தில் எழுவர் காயமடைந்தததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

பிற்பகல் மணி 1.30-க்கு தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்ட போது ஐந்து மாடிகள் கொண்ட அக்கிடங்கில் பணியாற்றிய 20 பேர் அகப்பட்டுக் கொண்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அகப்பட்டுக் கொண்டவர்களை காப்பாற்ற மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்தில் காணப்பட்டனர்.

விபத்தில் இருந்து தப்பிக்க மூன்றாவது மாடியில் இருந்து குதித்த ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

இத்தீவிபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)