ராஜஸ்தான், 20 டிசம்பர் (பெர்னாமா) -- இந்தியா, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் நகரில் எரிவாயு கொள்கலன் லாரி ஒன்று வெடித்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்தனர்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு கொள்கலன் லாரி மீது அவ்வழியே சென்றுக் கொண்டிருந்த லாரி ஒன்று மோதியதால் இவ்விபத்து நிகழ்ந்தது.
இன்று அதிகாலை நிகழ்ந்த இச்சம்பவத்தினால் அதிகமானோர் காயமடைந்திருப்பதாக கூறப்பட்டாலும், அவர்களின் எண்ணிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
எரியும் வாகனங்களில் அகப்பட்டுக் கொண்டவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
வேகமாக பரவிய தீயினால் வாகனங்களிலேயே எரிந்த உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் வெளியே கொண்டு வந்தனர்.
விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)